Friday, 19 October 2012

ஹைக்கு.......


                                      usha.uthayakumar@yahoo.com
                                         





வாழ்வின் சவால்....


இதயத்தின் விண்ணப்பம்...


                                                                  usha.uthayakumar@yahoo.com

Tuesday, 9 October 2012

உன் எண்ணங்கள் ஈடேறும்,,,,,,


உன் இளமை ராஜ்யத்தின்
பயணம் விவேகமானது....!
உன் வரட்சிகளை பட்டினி போட்டு
உன் புரட்சிகளை தீட்டு.....!
குரோதங்களை உன் குருதியில் குவிக்காதே
அது உன்னை பிறர் முன் விரோதமாக்கும்..!
உன் உணர்வுகளுக்கு
ஒற்றுமை பாடம் கற்று கொடு..!


சிலர் உன்னை புரிந்து கொள்வர்
சிலர் உன்னை எறிந்து தள்வர்
இது தான் வாழ்க்கை...!
உலகம் உனக்கு சாதகப்பட்டால்
எதற்காக நீ படைக்க பட்டாய்..???????
நீ பிறர் தீண்டும் காற்றாடி
தீண்ட தீண்ட தான் நீ சிற்பம் ஆகிறாய்..!
உன்னை நீ நற்செயல்களால் செத்துக்கினால்
உன் எண்ணங்களின்  ஈடேற்றம் வெகு எளிதில்,,..!



கவி வரிகள்: உஷா நிலா 

                   uthayausha88@gmail.com

ஹைக்கூ,,,,,,,,,

                                            

    

Monday, 8 October 2012

தோல்வி தாண்டாமல் வெற்றி இல்லை!


அதிகாலையில் எழு!  அகத்தினை மதி !
ஆண்டவனை வணங்கு ! ஆசானை பணி..!
இயன்றவரை முன்னேறு ! இன்பத்தை சொந்தமாக்கு!
 ஈன்றவர்களை மறவாதே! ஈவிரக்கம் கொள்!
உண்மையை பேசு! உறுதியுடன் முன்னேறு!
ஊனத்தை வெறுக்காதே! ஊமைக்கு உதவு!


எவரையும் இகழாதே! எவர் இகழ்ச்சிக்கும் ஆளாகாதே!
ஏழைகளை நேசி! எதிரிக்கு உபதேசி!
ஏணி போல் உயர்! ஏழாவது அறிவை தேடு!
ஐயத்தை போக்கு! ஐவருடனும் அன்பாய் இரு!
ஒற்றுமையை ஏற்படுத்து! ஒருதலை காதலை ஒழி!
ஓடுவது காலம்! ஓட்டுபவன் நீ!



சிலை ஒரு கலை! கலைக்கேது விலை !
காலமொரு சக்கரம்! காத்திருந்தால் சுழன்று விடும்!
கிடைப்பதை ஆசைப்பட்டு! கிட்டாததை பேராசை படு!
கீதையை யாசி! கீழ்மை ஏன் என ஜோசி!
கெட்டதை மறந்து விடு! கேட்டது கிடக்கும்!
கொடுப்பவன் கடவுள்! கெடுப்பவன் மிருகம்! 



மானிடர்க்கெல்லாம் மரணம்! அவ் மரணத்திற்கு ஏது மரணம்!
மனிதனை நேசி! மண் சக உயிரையும் நேசி!
மாறுவது மனம்! மாற்றுவது பணம்!
மூளைக்கு வேலை கொடு! முன்னேற்றத்திற்கு தடை இல்லை!
தண்ணீருக்கேது கண்ணீர்! தரணிக்கு தானே மழை நீர்!
தன்மானத்துக்காய் போராடு! தலை சிறந்தவராய் நீ மாறு!



தினசரி நீ சென்று ! திக்கெல்லாம் புது அறிவை தேடு!
துன்பத்தை நீயாக தேடாதே! தூக்கத்திலும் துயரத்தை நினைக்காதே!
தென்றலுக்கு ஓய்வில்லை! தேடலுக்கும் எல்லை இல்லை!
தொடும் தூரம் வானில்லை! தோல்வி தாண்டாமல் வெற்றி இல்லை!
சத்தியத்தை நிலை நாட்டு! சமாதானத்தையும் உருவாக்கு!
சரித்திரம் பலவும்! உனக்கு சான்றுகள் ஆகட்டும்! 



சிந்தையுடன் செயற்படு! சிகரம் உனக்குண்டு!
சோர்வு கொள்ளாதே! சோகம் உனக்கில்லை!
சோதனைகள் தான் உன் சொந்தங்கள்! 

சாதனைகள் தான் உன் மாற்றங்கள்!
சிந்தனையை சீராக்கு! சொர்க்கம் உன் காலடியில்.........!

 

கற்பனை வரிகள்: உஷா நிலா 

                      usha.uthayakumar@yahoo.com

ஆசிரியர்........



                                                     uthayausha88@gmail.com

Friday, 5 October 2012

இதயத்திற்குள் இதயம்...........



மனிதனாக படைக்க பட்ட ஒவ்வொருவருக்குள்ளும்
இரக்க குணம் இருக்க வேண்டும் என்பதற்கே
மனிதனுக்குள் இதயத்தை விதைத்து
அனுப்புகிறான் இறைவன்,,,,,,,,,,,!
அந்த இதயத்திட்குள்ளும் இன்னோர்
இதயத்தை விதைக்கிறது காதல்,,,,,,,,,,,!
இரு உயிர்களின்  இரத்த உறவுகளையும் தாண்டி
இருப்பெடுக்கும் ஒரு இதய உறவு....!



                            வரிகள்: உஷா நிலா,,,,,,,,,,,,,,

உன் நினைவுகளில் நான்....



அலைகளுக்கு திரும்பிப் போக இஷ்டமில்லை...
உன் கால் தடம் படாததால் அலைகளுக்கு
திரும்பிப் போக இஷ்டமில்லை...
சிம்மாசன பதவியேற்றம் நீ
அமர்ந்த கதிரைகளுக்கெல்லாம்...

உன் பார்வை பட்டு தானோ சூரியன்
ஒளித்தொகுப்பு செய்கிறது...


நீ அருகில் இருக்கையில் என்

வார்த்தைகளுக்கு ஊரடங்கு சட்டம்...
நிலவுக்கும் நித்திரையில்லை உன் நினைவால்...
சந்திரனில் குடியேற விஞ்ஞானம் முயற்சி...
உன் மடியில் இளைப்பாற கோள்கள் எல்லாம் போட்டி...
இவைகளுக்கில்லா பெருமை எனக்கு...
நீ கிடைத்ததில் உன்டான மகிழ்ச்சி....
 
                         கவி வரிகள் : உஷா நிலா........
                                   uthayausha88@gmail.com

மரணம்.......



                                     மரணம்........

குறிக்கப்பட்ட தேதியில்
பறிக்கப்பட்ட மலர்...
மீண்டும் புவிதனில் அவதரிக்க
நிகழ்ந்திடும் புது முயற்சி...

ஓய்வினைத் தேடிய உயிருக்கு
விடிவினை தராத உறக்கம்..

வாழ்க்கைப் பாதையின்
இறுதி யாத்திரை..
உன் சொர்க்கத்தையும்
நரகத்தையும் தீர்மானிக்கும் வாசல்
உன் உதயம் அஸ்தமனமாகும் நாள்
அதுவே மரணம்,,,
 
                  கவி வரிகள் : உஷா நிலா........
                  
 

விடியலைத் தேடும் பூபாளம்....




           விடியலைத் தேடும் பூபாளம்....
 
கோடைகால மணற் கிடங்காய்

எம் மக்களின் வாழ்வியல்
எப்போது மாறும் இந்த நிலை
என ஏங்கும் பல உள்ளங்கள்?
புடம் போட்டுத் தேடினாலும்
புரியவில்லை இந்த வறுமை நிலை
விலை வாசியின் ஏற்றத்தால் தினமும்
விரத நிலை பல வீட்டில்... 

தான் ஈன்ற கன்றை
தாரை வார்த்துக் கொடுப்பதற்கும்
தானே போராடி நிற்கும் தாய்
தள்ளாடுகிறாள் சீதனக் கொடுமையால்...
மாறுமா இந்த நிலை என பல
மனங்கள் சிந்தித்தால் மட்டும் போதுமா..?
சிந்தித்த மனங்கள் எல்லாம் ஒன்றாகி
வென்றிட வேண்டாமா இந்த பிரபஞ்சத்தை
நாளைய சமுதாயம் நம் வரலாறு கூற
இன்றைய சம்பவங்கள்

உனக்கு சரித்திரமாகட்டும் தோழா...

உழைப்பால் உயர்ந்தவர்கள் கோடி இந்த
உண்மையைப் புரிந்து
உயர்ந்திடு வாழ்வைத் தேடி...
சோம்பலாய் இருப்பவர்களை நம்பி
சோரம் போகாதே தம்பி...
சிந்தனைகளை சிதறடித்து எம்மை
சீர்குலைக்கும் சீரற்ற
எண்ணங்களை ஒழிப்போம்...
எத்தனை செல்வம் தான்
இயற்கை அன்னையிடம்
அதைச் செழிப்புறச் செய்யவும்
தயக்கமேன் மனிதா ?


அகதிகளின் அவல நிலையோ எம்

அகக் கண்களில் அனல் பொறியாய்...
தான் மட்டும் வாழ்ந்தால் போது மென்றால்
எதிர்கால சகோதரத்துவம்
எப்படிப் போவதோ...?
ஒன்றிணைந்தோம் ஒரே தேச மக்கள் என்று
ஒருமித்த கரங்கள் எல்லாம் ஓங்கினால்
ஒருநாளும் பஞ்சமில்லை எம் நாட்டில்
உதிரத்தை உரமாக்கி உயர்ந்திடு வாழ்வில்
விடியும் இந்த பூபாளம்
நாளை உன் வாழ்வில்...


                                         
                              கவி வரிகள் : உஷா நிலா,,,,,,,,,,
                             uthayausha88@gmail.com

இதயத்தின் விண்ணப்பம்........



 உன் பெயர் சொன்னால் புல்லாங்குழல் கூட
காற்றில்லாமலே கவிதை வாசிக்கும்...
உன் இதயம் கேட்டு நூறு ரோஜா தோட்டங்கள்
விண்ணப்பித்த போது உன் மனது எனக்கு மட்டும் மழை தந்தது...
          அடுத்த பௌர்ணமி பார் அதில் என் இதயம் தெரியும்...
 
 
 ப்ரியமுடன்: உஷா நிலா,,,,,
                                           uthayausha88@gmail.com 


மகளிர்க்காக...



                          மகளிர்க்காக...

பெண்ணும் பொன்னும் ஒன்று
அதை உணர வைத்தோம் இன்று...
மென்மையான பெண்மையிலே மெய்ப்பார்க்கும்

உன் அழகையல்ல அகத்தையே...

அடுப்பூதும் பெண்ணுக்கும் படிப்பெதற்கு

ஆடவன் சொன்னான் அன்று....

புது நூற்றாண்டில் பற்பல புதுமைகள்

படைத்தது பெண்ணினம் இன்று...


உதிரத்தை உரமாக்கி தன் சேய்க்கு

உணவளித்த தாயினமும் இங்கு...

மகளிர் தினத்தில் உயர்ந்து நிற்கின்றது இன்று...

பெண் படைப்புகளோ பலருக்கு

பாடப்புத்தகமானதும் உண்டு ...


பெண் பெருமை கூறும் பல வரலாறுகள்

கண்டு மனிதன் மாறியதும் உண்டு...

பெண்ணினம் பெற்ற பெருமையிலே

அன்னை தெரேசாவும்

அடங்கும் அவனியிலே...


ஆயிரம் அறிஞர்கள் பெண்களிலே...

அரசியல் வென்றதும் உண்டு அகிலத்திலே...

மகளிர் பெருமை கூறும் இந்நாளிலே

மனம் திறந்து வாழ்த்துவோம் மங்கையை...


                         கவி வரிகள்: {உஷா நிலா }
                                    uthayausha88@gmail.com 

நிருபர்,,,,,,,



நிருபர்,,,,,,,
மூடிமறைக்கப்பட்ட சம்பவங்களை
வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்
நிதர்சனவாதி..
அச்சமின்றி அலைந்து
அவலங்களை அகிலத்துக்கு வழங்கும்
அகிம்சாவாதி
செய்திகளை சேகரித்து
செவ்வனே தொகுத்தளிக்கும்
மக்கள் நண்பன்...

உண்மையை உலகிற்கு எடுத்துரைக்க
தன் உயிரையே தியாகம் செய்யும்
உண்மைப் பாங்கன்
மெய்யை நிலை நாட்ட
பேனா முனையில்
போராடும் போராளி...

அவன் எழுத்துருவில்
வடித்த தகவல்கள்...
அவனிக்கு எடுத்துரைக்க
ஏந்திவரும் பத்திரிகை...
நாட்டின் தலையெழுத்தை
மாற்றும் உந்து சக்தியும்
அவன் கையேழுத்தே..

நாளிதழ் சுமந்து
வரும் நாட்குறிப்பில் நாடெங்கும்
பவனிவரும் செய்திகளோ ஏராளம்
எதையும் துச்சமென எழுத்தாணி
பிடித்து எழுதிய உண்மைகள்...
ஏற்றத்தாழ்வின்றி
ஏந்திடும் பத்திரிகை
விளைநிலத்தின்
ஏர்க்கலப்பையாய் உழுது....
உரமாய் உறிஞ்சி...
உழைப்பால் பெருகி,,,
பத்திரிகைத் துறைக்கு
பசளையிட்ட
பெருமையும்
 
அவனையே சாரும்..

 கவி வரிகள்: {உஷா நிலா }
                usha.uthayakumar@yahoo.com

Thursday, 4 October 2012

வலி....



உன் அழுகை சோகமல்ல......
அது என் மீது நீ கொண்ட பாசம்.....
என் கடும் வார்த்தைகள் கோபமல்ல......

அது நான் உன் மீது கொண்ட உரிமை....
பழகிடும் உறவுகள்  பிரிந்திடும் வேளையில்

விழிகளும்,,,, தாங்காது...!!!! தூங்காது...!!!! 

                                கவித்தயாரிப்பு: உஷா நிலா

கண்ணீர்,,,,,,,,



                                                                                                             uthayausha88@gmail.com

தோல்வி தான் தோழன் ....



தோல்வி என்பது உனக்கு வழங்கப்படும் பரீட்சை தாள்....
நீ முதல் அதை படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்...
உன் பலவீனங்களை பலப்படுத்த கடவுள் 

உனக்கு அளிக்கும்
சந்தர்ப்பம் தான் தோல்வி....
உன்னை இன்னொருபடி முயற்ச்சிக்கு 

தூக்கிவிடும் உன் தோழன் தான் தோல்வி....

நீ வீழ்ந்தால் கவலை வேண்டாம்..
நீ விழவேண்டும் அப்போ தான் உன்னால் எழ முடியும்...
தோல்வி இல்லாவிடின் வெற்றியின் பெறுமதி
உனக்கு தெரியாமலே போய்விடும்...
நீ மனிதன் என்பதை உனக்கு நினைவு 
செய்வதேதோல்வி தான்........

உன் முயற்ச்சிகளை காலத்தை விட வேகமாக இயக்கு
அப்போ தான் உன் வெற்றி நாளைய விடியலில்...
உன் வேகத்தின் துரிதம் பகலாக இருந்தாலும் பரவாயில்லை
உன் விழிகளால் விளக்கேற்றி வை...
உனக்கான வெளிச்சம் வெகு தூரம் இல்லை...


கவிதை இயக்கம் : உஷா நிலா
                           uthayausha88@gmail.com 

வாழ்வின் நியதி......


உன் வாழ்க்கை பயணத்தில்................
சுவாசிக்கும் காற்றும் உன்னை
சோதிக்கும் தருணம் வரும்
அது இறைவனின் ஏட்டில் எழுதப்பட்ட விதி...........
ஒன்றாய் கரம் கோர்த்தவனும்
ஓர் நாள் உனக்கு எதிராகலாம்
அது பிறர் செய்யும் சதி........

குற்றம் சொல்லும் மனிதர்கள்
என்றும் கூறிக்கொண்டே இருப்பர்
அது அவர்களின் வியாதி........
வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
பிறர் உன்னை தூற்றினாலும்
உன் மனதிற்கு நீயே நீதிபதி......


வற்றினாலும் மீண்டும் மீண்டும்
வழிந்தோடும் தன்மை கொண்டதே நதி..........
உன் இலக்கை நீ இயக்குவதற்கு
உன் முயற்ச்சியில் வேண்டும் துரித கதி......
படைத்தவனே வியந்து பாராட்டும் வண்ணம்
பார் போற்ற வாழ்வதற்கு சபதம் எடு
அது தான் உன் மதி............

தனக்கும் தனம் வரும் என்றால்
தன்னலத்திட்க்காய் சிலர் செயும்
தீய செயல் அநீதி........
அதை தட்டி கேட்க்க சென்றவனுக்கு
என்றும் கிடைத்ததில்லை நீதி...........
இதை இங்கு சொல்வதால்
உஷாவிற்க்கு கிடைக்க போவதில்லை நிதி.......
இருந்த போதிலும் இது தான் வாழ்வின் நியதி......


                                கவிதை இயக்கம்: உஷா நிலா

முயற்சியின் வேகம்........




உன் வாழ்க்கை தான் உனக்கு வகுப்பறை...
துயரங்கள் தான் உனக்கான பாடங்கள்...
தோல்விகளும் கஷ்டங்களும் உனக்கான பாடங்கள்..
உனக்கு உன்னை தவிர யாரும் நிரந்தர சொந்தமில்லை..
உன் கஷ்டங்களே உன்னை பலப்படுத்தும்...
உன் பலன்கள் ஒருபோதும் பயனற்று போவதில்லை..
.

தென்றலுக்கு முகமில்லை உன் தேடலில் முடிவில்லை...
தொடும் தூரம் நிலவில்லை தோல்வி இல்லா வாழ்வில்லை...
நம்பிக்கை என்ற நண்பன் உன் நாணயத்தின் உண்மை பங்கன்..
முயற்ச்சி என்னும் ஊன்றுகோல் உனக்கு மூன்றாம் கால்...
உனக்கான சிறு சோதனைகள் உன் பெரும் சாதனைக்காக
நீ நடக்கும் பாதையில் வீசப்பட்ட முட்கள்...


மனம் தளராதே தோழா!
தோல்வி உன்னை எவ்வளவு சோதித்தாலும்
துயரங்களால் நீ வாழ்வின் எல்லைக்கே துரத்தியடிக்க பட்டாலும்
முடியும் என்ற உன் முயற்ச்சியை மட்டும் என்றும் மூடிவிடாதே....
உன் முன்னேற்றத்தை முடிவு செய்வதே உன் முயற்ச்சி தான்...


                                               கவிதை இயக்கம்: உஷா நிலா

காதல் பருவமழை.........

உன் விழியசைவில் என்னை விழ வைத்தாய்........
உன் இதழ் அசைவில் என்னை சிறை செய்தாய்......
தென்றலாய் என் தேகம் தீண்டினாய்....
ஓர் நாளிலே என்னை காதல் தேரிலே ஏற்றினாய்..
.
 
உன் பார்வைகளால் என்னை பருகினாய்...
உன் வார்த்தைகளால் என்னை வருடினாய்...
என் பருவம் இதற்க்காகவே பூத்து நின்றது...
உன் மௌன மொழிகளால்
என் 
வெட்க்கங்களுக்கும் சத்தம் செய்தாய்...

என் மனம் நீ வசிக்கும் மாளிகையானது..
என் விரல் நீ மீட்டும் வீணையாகியது...
எண்ணற்ற உன் எண்ணங்களை
ஏந்தியிடும் சுவரொட்டி தான் என் மனது...
என் இதயத்தில் பல்லாயிரம் பட்டாம் பூச்சிகளுக்கு திருவிழா
என் அருகில் நீ அமருகையில்... 


உன் காதல் கடிதங்கள் எனக்கு பரீட்சை தாள்கலாகியது....
என் இரவுகள் உன் நினைவுகள் தாங்கும் க
னவுகளாகியது...
விடையில்லா வினாவாகிய என் மனதிற்க்கு
கரையில்லா கடலாகியது உன் காதல்...
பருவமழை என் வயதிற்க்கு பால் வார்த்தது...
காதல் என்ற பருவப்பூ என் இதயத்தில் படர்ந்தது.... 


இக் கற்ப்பனைகளின் சொந்தம் : உஷா நிலா


பிரிவும் பிரிக்காது..........



நீயும் எனக்கு சொந்தமில்லை
நானும் உனக்கு சொந்தமில்லை...
நம் நினைவுகள் மட்டும் இன்றும்
நம் இருவருடனும் உறவாடி கொண்டிருக்கிறது..
என் கண்கள் எனும் கருவறை
உன் உருவத்தையும்..
என் இதயம் எனும் மனவறை
உன் நினைவுகளையும் சுமக்கும் வரை
பிரிவு என்னும் சொல் கூட நம்மை பிரிக்காது அன்பே...


கவிதை தயாரிப்பு: உஷா நிலா


விழியின் அமுதம்...........


அவன் விழிப்பார்வை பருகி
என்னையே நான் மறக்க வேண்டும்...
அவன் புன்னகை குளத்தில்
என் சந்தோஷ தாமரைகள் பூக்க வேண்டும்..
.
அவன் விரல் பிடித்து நான் நடக்கையில்
எம் பொருத்தம் கண்டு
எட்டு திசையும் ஒருகணம் ஸ்தம்பித்து நிற்க்க வேண்டும்..
அவன் பாசம் கண்டு பறவைகள் கூட
அவன் வேண்டும் என்றே அடம் பிடிக்க வேண்டும்...

என் மனதில் அந்த தென்றல் யாசிக்க
அவன் அன்பென்ற தகுதியில் சிகரத்தில் நிற்க்க வேண்டும்...
அந்த அன்பினால் என் விழிகளுக்கு- தினம்
ஆனந்த குளியல் வேண்டும்...
அப் பூங்காவின் வலிய இரு கைச்சிறைக்குள்
நான் மட்டும் ஆயுள் கைதியாய் வாழ வேண்டும்...

நீல வானம் அவனை கண்டு நாணம் கொண்டு
கரு மேகங்களால் தன் முகம் மூடும்
விந்தையை இவ் உலகம் காண்பதெப்போ?
இத்தனையும் மொத்தம் சேர்த்து
பிரம்மன் எப்போதோ செப்பனிட்டு
அனுப்பி வைத்த ஓர் சிற்ப்பம் வரும் வழி
பார்த்து இவ்விரு கருவிழிகள் நோக்கும் தருணம் எப்போ? 


இக் கவிதை இயக்கம்: உஷா நிலா


அவல நிலை.........






                    அகதிகள்......

 

ஊர் விட்டு ஊர் ஊராய்
உலவும் உயிர்களா...?
இருப்பை இழந்து இடுக்கண் அடைந்து
இடம் பெயர்நதோரா?

சொந்தங்களால் கைவிடப்பட்டு
சோதனைகளால் தள்ளப்பட்டவர்களா?
அனாதியிலே ஆதரவற்று "அகதி" என்னும்
அடைமொழி கொண்டா
அகராதியில் எழுதப்பட்டார்கள்?

ஏன் இந்த நிலை?
என்றேனும் யோசித்ததுண்டா சமுதாயம்?
விண்ணிலே விஞ்ஞானம் தேடல்
மண்ணிலே அஞ்ஞானமா?
விரக்தியில் விரதம் இருக்கும் இவர்களுக்கு
வல்லமையை விதைப்பது யார்?
எம் முயற்சியால் விதியையும் மாற்றி எழுதுவோம்
இவர்களுக்கும் விடியும் ஓர் நாள் என்று....
   
                       
                         {கவித்தயாரிப்பு: உஷா நிலா }

காதல் தவம்.......


அன்பே...!
உன்னை என் விழிகள் புகைப்படம்
எடுத்த நாள் முதல்...
எண்ணற்ற உன் எண்ணங்களின் பிரதிகள் என் மனதில்...

தலைக்கணம் பிடிக்கிறது எனக்கு உன் அன்பெனும்
இலக்கணம் படித்து...
எப்படி சொல்வதென்பேன்
என்னவென்று சொல்வதன்பே உன் அன்பை...
எங்கே புடம் போட்டு தேடினாலும்- எவராலும்
எள்ளளவும் குறை காண முடியா ஓவியம் நீ...

எப்பிறப்பில் நான் என்ன தவம் செய்தேனோ
இப்பிறப்பில் உன்னை வரமாய் பெற...
இப்பிறப்பில் நான் என்ன தவம் செய்ய வேண்டுமோ
இனி எப்பிறப்பிலும் உன்னை இழக்காமல் இருக்க...
 
{கற்ப்பனை உதயம்: உஷா நிலா}

விழியின் அழகு........




என் வாலிபத்தை விபத்துக்குள்ளாக்கிய
உன் விழிகளுக்கு விஞ்ஞாபனம் விதைத்தது யார்?
நான் வழுக்கி விழுந்த உன் இதயவரையை
வடிவமைத்தது யார்?


நான் துயில் கொள்ளும் பூந்தோட்டமான
உன் மார்பிற்க்கு மைதானம் வரைந்தது யார்?

என் விழிகள் உன்னை ஸ்பரிசிக்கும் போது
என் உயிர் சொர்க்கத்தை எட்டுகிறது...

வார்த்தைகளை மட்டும் வாசிக்க தெரிந்த எனக்கு
காதலையும் சுவாசிக்க கற்று தந்தது உன் பாசம்..
என் கற்பனைகளும் முரண் பட்டு கொள்கிறது உயிரே
எம் மொழியில் உன்னை வர்ணிப்பது என தெரியாமல்...

இவை அனுபவமல்ல
இக் கற்பனைகளின் இயக்கம்
: உஷா நிலா

பார்வையின் பயணம்.......




உயிரே...
உன்னை நினைக்கும் பொது என்னிதயம்
தன்னிலை மறக்கிறது...
எத்தனை விழிகள் எதிரினில் தோன்றினும்
என் விழிகள் தேடிடும் நீ வரும் வழி....

 
உன் பூவிதழ் அருந்தி
கடல் நீரும் கனிச்சாராக மாறியதென்னவோ
உண்மை தான்....
உன் விம்பம் விழுந்து நிழல் கூட
உன்னை போல் ஒரு அழகு பொம்மையானது
என்பது சத்தியமாய் பொய் இல்லை..

உன் சுவாசத்தில் கலந்ததால்
தென்றலுக்கும் மோட்சம் கிட்டியதாமே..?
உன் உயிரில் உறைந்ததால் தான்
எனக்கும் ஆயுள் கெட்டியானதோ?

கிளிகளும் உன்னுடன் கொஞ்சி பேசும்
கிழக்கும் உன்னை கண்ட பின்னே வெளுக்கும்..
உன் மார்பில் துயில் கொள்ளவே
மலர் கூட்டங்கள் தோரணம் ஆகும்..
அழகென்னும் அகராதி உன்னை
படைத்த பின்பு தான் பிறந்திருக்குமோ?
அப்படித்தான் தோண்றுகிறது எனக்கும்.
..

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

சூரியனின் நேற்றைய காற்று...


 
 
 
சூரியனின் நேற்றைய காற்று...

மனமாளிகையில் கட்டி வைத்த

கற்பனை சித்திரங்களை
சித்தரிக்கும் ஓவியமாய்
சூரியனின் நேற்றைய காற்று...
இரவின் நிசப்தத்தில்
பல உறவுகளின் உணர்வுகளிட்க்கு
ஊர்வலமும் இங்கே தான்...
தினம் ராத்திரியில் உலா வரும் ஒரு நிலா
நேற்றைய காற்று...

மனித உணர்வு புத்தகத்தின் பக்கங்களை

தினம் புரட்டி பார்க்கும் ஓர் பயணம்...
சூரிய தோட்டத்தில் நேற்றைய காற்றின் சுவாசத்தை
எத்தனையோ பூக்கள் சுவாசிக்க தான் செய்கின்றன...

உள்ளத்தில் தூங்கும் எரிமலைகள்

நேற்றைய காற்றின் வழியே
வெளிப்படும் பட்சத்தில் தான்
புரிகிறது மானிடத்தின் ஏக்கமும் தாக்கமும்...

மாற்றம் என்ற ஒன்று உலகில்

மாறாத போதிலும்...
உங்கள் நிகழ்ச்சி ஏற்றம் பெற வாழ்த்தும்

                              இவள்: உஷா நிலா

என் பிறப்பின் தாய்.........



அம்மா உனது குருதி குளியலில்
என் ஜனனம்...
உனது பூமடிதான் நான் துயிலும்
பஞ்சனை...
உன் பத்து மாத தவம்
இன்று என் பரிணாமத்தின் உதயம்...


தாயே...!
என்னை இழந்து உன் உயிர் காக்கும்
தருணம் வரினும் அன்னையே
அது என் பாக்கியமே....
இல்லையேல் மீண்டும் உன்னை
என் கருவினில் சுமக்கும் தருணம் வரினும்
அது என் பூர்வ ஜென்ம வரமே...


கவிதை இயக்கம்: உஷா நிலா

அழகுக்கே அழகு....




விழி அழகா? மொழி அழகா? இரண்டும் இல்லை...
உன் விழி பேசும் மொழி தான் அழகு...
இதழ் அழகா? சொல் அழகா? இரண்டும் இல்லை..
உன் இதழ் சிந்தும் சொல் தான் அழகு...
நடை அழகா? இடை அழகா? இரண்டும் இல்லை
உன் நடையினில் நெளியும் இடை தான் அழகு...

கலை அழகா? சிலை அழகா? இரண்டும் இல்லை..
கலை வடிவிலுள்ள உன் உருவ சிலையே தனி அழகு...
ஊர் அழகா? தெரு அழகா? இரண்டும் இல்லை
உன் ஊரில் நீ வசிக்கும் தெரு தான் அழகு...
அழகழகா? அறிவழகா? இரண்டும் இல்லை
உன் அறிவிலுள்ள அழகே அழகு தான்..


கவிதை இயக்கம்: உஷா நிலா

தேவதை நிலவு........



அவள் புன்னகையில் குளித்த பின்னரே
ரோஜாக்கள் இதழ் விரிக்கின்றன...!
அவள் கயல் விழிகள் கண்டு
விண்மீன்கள் விடியலை தேடும்...!
அவள் கற்க்கண்டு மொழிகள் குடித்தே
என் ஆயுள் நீள்கிறது...!

அவள் கருங்கூந்தல் பிடித்தே
தென்றல் ஊஞ்சல் ஆட துடிக்கும்......!

மின்னல் அவள் மெல்லிடை தேடும்
தான் துயில் கொள்ளும் பள்ளியறை என நினைத்து ....!
என் உயிர் கொண்டு அவள் உயிர் வாழும் என்றால்
அது என் வரமே...!
அவளை இழந்து என் உயிர் வாழும் என்றால்
அதுவே என் மரணம்....!

கவிதை இயக்கம் : உஷா- நிலா

கனாக் காதல்.......


உங்கள் கருத்துக்களை  usha .uthayakumar @yahoo.com 
                                                   uthayausha88@gmail .com 

                                                                        பதிவு  செய்யுங்கள்.........

உன் நினைவுகளில் நான்.......

உன் சுவாசம் எனக்குள் பிரணவம்
உன் நாமம் எனக்குள் உயிர் துடிப்பு....!
தனிமையில் நான் இருக்கையில்
என் பொழுதுகளை நீயே களவாடிக்கொள்கிறாய்....!
எம் விழிகளின் சந்திப்பில்
இடம் மாறிய எம் இதயங்களால்...
என் எதிர்கால கனவுகள்
உனக்கும் சேர்த்து தான் வர்ணம் பூசுகிறது...!

கவிதை இயக்கம்: உஷா நிலா
 
 உங்கள் கருத்துக்களை   usha .uthayakumar @yahoo.com 
                                                       uthayausha88@gmail .com 

                                                                        பதிவு  செய்யுங்கள்.........
 

காதல் அருவி........


உங்கள் கருத்துக்களை  usha .uthayakumar @yahoo.com 
                                                   uthayausha88@gmail .com 

                                                                        பதிவு  செய்யுங்கள்.........



அழகு நிலவு.....




உங்கள் கருத்துக்களை    usha .uthayakumar @yahoo.com 
                                                       uthayausha88@gmail .com 

                                                                     
பதிவு  செய்யுங்கள்.........

அதிசய அழகு.......


நீ நடந்த கால் தடம் பட்டே
அலைகள் தன உடல் நனைக்க ஏங்கும்.....!
உன் பார்வை விழுந்தே
சூரியன் ஒளித்தொகுப்பு செய்ய துடிக்கும்....!
நீ துயில் கொள்ளும் பஞ்சணையில்
மரணிக்கவே மலர் கூட்டங்கள் தவிக்கும்...!
உன் மென் பாதம் பட்டு
புல்வெளிகளும் கவிதை பாடியது..!

உனக்காக ஒரு கிரகம் செய்வேன்
நாம் மட்டும் அங்கு வாழ...!
தென்றல் உன் மடியில் இளைப்பாறியது
அந்த நிமிடம் மீண்டும் பிறந்தேன் என்றது..!
உன் மூச்சு காற்று பட்டு
பாலைவனத்திலும் பருவ மழை பெய்ததாமே..!
பிரபஞ்சத்தின் அத்தனை அழகும் திருடி தான்
பிரம்மன் உன்னை பூமிக்கு தந்தானோ...!

{ கவிதை இயக்கம்: உஷா நிலா }

வான் முத்து,,,,,,,,,

                            நிலா...............
வானமெனும் பூங்கடலில்
வலம் வரும் பூங்கொடியே ...!
விண்ணை விட்டு நீ மண்ணகம் வர
முள்வேலி போட்டதாரோ?

செப்டெம்பர் மாதத்து செப்பனிட்ட அழகே....!

செங்கடலும் நீ இன்றி செம்மையளிக்கவில்லை...
கவிஞர்களின் கற்பனைக்கு
நீயின்றி ஏது சொர்ப்பனம்...!

எட்டா தூரத்தில் நீயிருக்க- என்

விரல் உன்னை தொட்டு
பார்த்திட விரதம் இருக்கு..!
முகில்திரையை மெல்ல நீ விலக்கு
இல்லை தொடரும் உன் மீது என் விழி வழக்கு...!

{ கவி வரிகள்: உஷா நிலா}
வாலிபம்.........

இலக்கிய வானில் கோலமிடும்

மின்மினிகள் போல்...,
வசந்தங்களுக்கும் வண்ணமளித்து
வடிவமைப்பது வாலிப வாழ்க்கையே..!


காகிதத்திற்க்கு கற்பனையையும்
சிந்தனைக்கு உள்ளத்தையும்
பேனாவிற்கு கரத்தையும்
அன்பளிக்கும் காலமிது,,,!

சிறகில்லை ஆனால் பறப்பாய்..!

காலிருந்தும் வானில் மிதப்பாய்..!
இது தான் உன் இளமை..!
மனத்திரைக்கு மாலைகள் போட்டு
மலர்க்கூட்டமாக்குவாய்... !
காதலும் உன்னை சோதிக்கும்
வயது இது...!

பட்டாம்பூச்சியாய் பாடித்திரிந்து

பல கதை பரிமாறும் பருவமிது...!
உன் கனவுகளுக்கு களம் தீட்டும் ஏவுகணை
இந்த உதயம்..!
பல கனவுகளை தேடி
உன் உயிர் போகும் பயணமிது,,!

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

புதிய பிறப்பு........


அன்பே..!
காளை உன் விழிகள் விவாதிக்கின்றன
கன்னியிவள் காதலுடன்..!
என் கண்ணை உன் விழியில் வைத்து கொண்டு
வேறு திசை பார் என்பது நியாயமா..?
ஊணுறக்கமின்றி உனக்காகவும்
துடிக்கும் ஒரு இதயம் இது..!

என் இரவுகள் உன் கனவுகள் தாங்கும் போது
உன் நினைவுகளே எனக்கு ஆகாரமானது..!
உன்னை கவித்தேரில் ஏற்றுகையில்
என் குருதியிலும் கற்பனை பூக்கிறது....!
தாரகைகள் பூத்தூவ !
தாமரைகள் கைதட்ட !
வானகம் பன்னீர் தெளிக்க !
வந்து பிறந்தாயோ நீ உன் தாய் மடியில்..!

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

கனவு நிலவு.........




நீ மலர் தோட்டம் சென்றாய்
அங்குள்ள பூக்களெல்லாம் பட்டம் பூச்சியாய் மாறி
உன்னை சுற்றியதாமே...!
மான் விழி கொண்ட உன் மருளும் பார்வையில்
சிக்குண்ட மங்கையர் எத்தனையோ?
பிறரிடம் ஊமையாகிறது ஒரு புல்லாங்குழல்
அது வார்த்தையாகும் போது உன் இதழ் பட
வேண்டும் என்று....!

நீ அழும் போது என் விழிகளிலும்
நயாகரா வீழ்ச்சி..!
என் உதடு துடிக்கும் அதிலும்
உனக்கோர் சத்தம் கேட்கும்..!
நட்ச்சத்திரங்கள் உன் விழிகளிடம்
பிச்சை வாங்க வேண்டும்..!
என் வாழ்வின் புதிய அத்தியாயம்
உன்னால் எழுதப்பட்டது..!
அன்பே இது வெறும் கவிதைகள் அல்ல
உன் நினைவுகள் ஏந்தி வரும் ஏவுகணை,,!

                             {கவி வரிகள்: உஷா நிலா}

பூக்களின் புன்னகை............


இனிமையான பருவம்.....


பருவத்து நிலா......


Wednesday, 3 October 2012

சுனாமி வந்ததால்........


2007 தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கவிதை போட்டியில் முதலிடம் பெற்ற என் கவி வரிகள்...
சுனாமி வந்ததனால்....


ஆழிப்பேரலை எனும் அடங்கா சுனாமி

ஆர்ப்பரித்து எழுந்து வந்ததனால்
எம் அகிலமும் அல்லல் கண்டது...
நீ ஆடிய ஊழி கூத்தினால்
எம் தேசமே சிதைந்து போக கண்டாயோ...

தத்தை மொழி பேசி

தத்தி தத்தி தவழும்
பச்சிளம் பாலகன் உனக்கென்ன கொடுமை செய்தான்?
ஈவிரக்கம் கொண்டாயோ நீ?

கல் மண் சேர்த்து

தன கஷ்டம் கொண்டு கட்டிய மனையில் வாழ
எத்தனை நெஞ்சங்கள் துடித்திருக்கும்...
அத்தனை அகங்களுக்கும்
அகதி முகாமை சொந்தமாக்கி விட்டாயே..?
இமை திறக்கும் ஒரு நொடியில்
எமன் உருவம் எடுத்தாயே?

அலை கொண்டு நீயளிக்க

அகிலமெல்லாம் துடி துடித்தார்கள்...
எட்டுத்திசையின் அலுகுரலுமா
எட்டவில்லை உன் செவிகளுக்கு?
பலரின் ஜனனம் அன்று மரணமாகியதே...
உன் தாகம் தீர
குருதி ஆறு பிறந்ததோ அன்று..
இருப்புகள் ஈடேறியபோதும்
இன்றும் ஈடேறவில்லை
எம் மனத்துயரங்கள்...

மீண்டும் வந்து விடாதே

மீள்குடியேற்றம் செய்யினும்....
மாண்ட உறவுகளை எம்மால்
மீட்க்க முடியாது...

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

காதல் பிரசவம்,,,,


நம்பிக்கை உங்கள் நண்பன்......







 
 

             
                     
மரணம் நோய் என்றால்
அச்சம் விடம்...!
தினம் தினம் உன்னை சாகடிக்கும்
உயிர் கொல்லி..!
உனக்குள் இருக்கும் உன்னை நீ அழிக்காமல் இருக்க
உனக்குள் இருக்கும் அச்சத்தை ஒழித்து விடு...!
பீதி எனும் பிணி கொண்டு
சிகரம் நீ தரிசிக்க முடியாது......!
உன் இலக்கு நோக்கி நீ அடி எடுத்து வைக்கும் போது
உன் அச்சம் அதற்கு அணை கட்டும்...!

அச்சப்படு.....!
உன் எண்ணங்கள் நரகத்தில் பூக்கும் போது
நீ அச்சப்பட்டு....!
பிறர் குடி உன்னால் கெடுமெனில்
அப்போது அச்சப்படு....!
துன்பத்திற்கு உன் விரல் துணை போகிறதா?
துணிந்து அச்சப்படு...!
இன்பத்தின் இலக்கை நீ அடையும் போது
அங்கே உன் அச்சம் தோற்று போக வேண்டும்...!
நம்பிக்கை எனும் இமயம் நீ நிற்கும் போது
அச்சம் உன்னை கண்டு ஐயப்படும்.......!

   {கவி வரிகள்: உஷா நிலா}

சூரியனின் நேற்றைய காற்று கேளுங்கள்.........