Thursday, 4 October 2012

புதிய பிறப்பு........


அன்பே..!
காளை உன் விழிகள் விவாதிக்கின்றன
கன்னியிவள் காதலுடன்..!
என் கண்ணை உன் விழியில் வைத்து கொண்டு
வேறு திசை பார் என்பது நியாயமா..?
ஊணுறக்கமின்றி உனக்காகவும்
துடிக்கும் ஒரு இதயம் இது..!

என் இரவுகள் உன் கனவுகள் தாங்கும் போது
உன் நினைவுகளே எனக்கு ஆகாரமானது..!
உன்னை கவித்தேரில் ஏற்றுகையில்
என் குருதியிலும் கற்பனை பூக்கிறது....!
தாரகைகள் பூத்தூவ !
தாமரைகள் கைதட்ட !
வானகம் பன்னீர் தெளிக்க !
வந்து பிறந்தாயோ நீ உன் தாய் மடியில்..!

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

No comments: