Wednesday, 3 October 2012

நம்பிக்கை உங்கள் நண்பன்......







 
 

             
                     
மரணம் நோய் என்றால்
அச்சம் விடம்...!
தினம் தினம் உன்னை சாகடிக்கும்
உயிர் கொல்லி..!
உனக்குள் இருக்கும் உன்னை நீ அழிக்காமல் இருக்க
உனக்குள் இருக்கும் அச்சத்தை ஒழித்து விடு...!
பீதி எனும் பிணி கொண்டு
சிகரம் நீ தரிசிக்க முடியாது......!
உன் இலக்கு நோக்கி நீ அடி எடுத்து வைக்கும் போது
உன் அச்சம் அதற்கு அணை கட்டும்...!

அச்சப்படு.....!
உன் எண்ணங்கள் நரகத்தில் பூக்கும் போது
நீ அச்சப்பட்டு....!
பிறர் குடி உன்னால் கெடுமெனில்
அப்போது அச்சப்படு....!
துன்பத்திற்கு உன் விரல் துணை போகிறதா?
துணிந்து அச்சப்படு...!
இன்பத்தின் இலக்கை நீ அடையும் போது
அங்கே உன் அச்சம் தோற்று போக வேண்டும்...!
நம்பிக்கை எனும் இமயம் நீ நிற்கும் போது
அச்சம் உன்னை கண்டு ஐயப்படும்.......!

   {கவி வரிகள்: உஷா நிலா}

No comments: