Thursday, 4 October 2012

பார்வையின் பயணம்.......




உயிரே...
உன்னை நினைக்கும் பொது என்னிதயம்
தன்னிலை மறக்கிறது...
எத்தனை விழிகள் எதிரினில் தோன்றினும்
என் விழிகள் தேடிடும் நீ வரும் வழி....

 
உன் பூவிதழ் அருந்தி
கடல் நீரும் கனிச்சாராக மாறியதென்னவோ
உண்மை தான்....
உன் விம்பம் விழுந்து நிழல் கூட
உன்னை போல் ஒரு அழகு பொம்மையானது
என்பது சத்தியமாய் பொய் இல்லை..

உன் சுவாசத்தில் கலந்ததால்
தென்றலுக்கும் மோட்சம் கிட்டியதாமே..?
உன் உயிரில் உறைந்ததால் தான்
எனக்கும் ஆயுள் கெட்டியானதோ?

கிளிகளும் உன்னுடன் கொஞ்சி பேசும்
கிழக்கும் உன்னை கண்ட பின்னே வெளுக்கும்..
உன் மார்பில் துயில் கொள்ளவே
மலர் கூட்டங்கள் தோரணம் ஆகும்..
அழகென்னும் அகராதி உன்னை
படைத்த பின்பு தான் பிறந்திருக்குமோ?
அப்படித்தான் தோண்றுகிறது எனக்கும்.
..

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

No comments: