Monday, 8 October 2012

தோல்வி தாண்டாமல் வெற்றி இல்லை!


அதிகாலையில் எழு!  அகத்தினை மதி !
ஆண்டவனை வணங்கு ! ஆசானை பணி..!
இயன்றவரை முன்னேறு ! இன்பத்தை சொந்தமாக்கு!
 ஈன்றவர்களை மறவாதே! ஈவிரக்கம் கொள்!
உண்மையை பேசு! உறுதியுடன் முன்னேறு!
ஊனத்தை வெறுக்காதே! ஊமைக்கு உதவு!


எவரையும் இகழாதே! எவர் இகழ்ச்சிக்கும் ஆளாகாதே!
ஏழைகளை நேசி! எதிரிக்கு உபதேசி!
ஏணி போல் உயர்! ஏழாவது அறிவை தேடு!
ஐயத்தை போக்கு! ஐவருடனும் அன்பாய் இரு!
ஒற்றுமையை ஏற்படுத்து! ஒருதலை காதலை ஒழி!
ஓடுவது காலம்! ஓட்டுபவன் நீ!



சிலை ஒரு கலை! கலைக்கேது விலை !
காலமொரு சக்கரம்! காத்திருந்தால் சுழன்று விடும்!
கிடைப்பதை ஆசைப்பட்டு! கிட்டாததை பேராசை படு!
கீதையை யாசி! கீழ்மை ஏன் என ஜோசி!
கெட்டதை மறந்து விடு! கேட்டது கிடக்கும்!
கொடுப்பவன் கடவுள்! கெடுப்பவன் மிருகம்! 



மானிடர்க்கெல்லாம் மரணம்! அவ் மரணத்திற்கு ஏது மரணம்!
மனிதனை நேசி! மண் சக உயிரையும் நேசி!
மாறுவது மனம்! மாற்றுவது பணம்!
மூளைக்கு வேலை கொடு! முன்னேற்றத்திற்கு தடை இல்லை!
தண்ணீருக்கேது கண்ணீர்! தரணிக்கு தானே மழை நீர்!
தன்மானத்துக்காய் போராடு! தலை சிறந்தவராய் நீ மாறு!



தினசரி நீ சென்று ! திக்கெல்லாம் புது அறிவை தேடு!
துன்பத்தை நீயாக தேடாதே! தூக்கத்திலும் துயரத்தை நினைக்காதே!
தென்றலுக்கு ஓய்வில்லை! தேடலுக்கும் எல்லை இல்லை!
தொடும் தூரம் வானில்லை! தோல்வி தாண்டாமல் வெற்றி இல்லை!
சத்தியத்தை நிலை நாட்டு! சமாதானத்தையும் உருவாக்கு!
சரித்திரம் பலவும்! உனக்கு சான்றுகள் ஆகட்டும்! 



சிந்தையுடன் செயற்படு! சிகரம் உனக்குண்டு!
சோர்வு கொள்ளாதே! சோகம் உனக்கில்லை!
சோதனைகள் தான் உன் சொந்தங்கள்! 

சாதனைகள் தான் உன் மாற்றங்கள்!
சிந்தனையை சீராக்கு! சொர்க்கம் உன் காலடியில்.........!

 

கற்பனை வரிகள்: உஷா நிலா 

                      usha.uthayakumar@yahoo.com

ஆசிரியர்........



                                                     uthayausha88@gmail.com