Thursday, 4 October 2012

அதிசய அழகு.......


நீ நடந்த கால் தடம் பட்டே
அலைகள் தன உடல் நனைக்க ஏங்கும்.....!
உன் பார்வை விழுந்தே
சூரியன் ஒளித்தொகுப்பு செய்ய துடிக்கும்....!
நீ துயில் கொள்ளும் பஞ்சணையில்
மரணிக்கவே மலர் கூட்டங்கள் தவிக்கும்...!
உன் மென் பாதம் பட்டு
புல்வெளிகளும் கவிதை பாடியது..!

உனக்காக ஒரு கிரகம் செய்வேன்
நாம் மட்டும் அங்கு வாழ...!
தென்றல் உன் மடியில் இளைப்பாறியது
அந்த நிமிடம் மீண்டும் பிறந்தேன் என்றது..!
உன் மூச்சு காற்று பட்டு
பாலைவனத்திலும் பருவ மழை பெய்ததாமே..!
பிரபஞ்சத்தின் அத்தனை அழகும் திருடி தான்
பிரம்மன் உன்னை பூமிக்கு தந்தானோ...!

{ கவிதை இயக்கம்: உஷா நிலா }

No comments: