Thursday, 4 October 2012

அவல நிலை.........






                    அகதிகள்......

 

ஊர் விட்டு ஊர் ஊராய்
உலவும் உயிர்களா...?
இருப்பை இழந்து இடுக்கண் அடைந்து
இடம் பெயர்நதோரா?

சொந்தங்களால் கைவிடப்பட்டு
சோதனைகளால் தள்ளப்பட்டவர்களா?
அனாதியிலே ஆதரவற்று "அகதி" என்னும்
அடைமொழி கொண்டா
அகராதியில் எழுதப்பட்டார்கள்?

ஏன் இந்த நிலை?
என்றேனும் யோசித்ததுண்டா சமுதாயம்?
விண்ணிலே விஞ்ஞானம் தேடல்
மண்ணிலே அஞ்ஞானமா?
விரக்தியில் விரதம் இருக்கும் இவர்களுக்கு
வல்லமையை விதைப்பது யார்?
எம் முயற்சியால் விதியையும் மாற்றி எழுதுவோம்
இவர்களுக்கும் விடியும் ஓர் நாள் என்று....
   
                       
                         {கவித்தயாரிப்பு: உஷா நிலா }

No comments: